முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயண விளம்பரங்கள்: ஜெகன் மோகன் அரசு மீது பா.ஜ.க. விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயணங்களுக்கான விளம்பரங்கள் இடம் பெற்ற விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அரசை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

திருப்பதியிலிருந்து கோவில் நகரமான திருமலைக்கு செல்லும் பயணிகளுக்கு ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் வழங்கிய டிக்கெட்டுகளில் இந்து அல்லாத யாத்திரை பற்றிய விளம்பரங்கள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டிக்கெட்டுகளின் பின்புறத்தில் ஹஜ் மற்றும் ஜெருசலேமுக்கான யாத்திரை பற்றிய அரசு விளம்பரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விளம்பரங்களை கவனித்த பயணிகள் அதை பிராந்திய மேலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்துக்கள் அல்லாதோர் செல்லும் யாத்திரை பற்றி அச்சிடப்பட்ட டிக்கெட் மூட்டைகள் தவறுதலாக திருப்பதிக்கு வந்துள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர். போக்குவரத்து அமைப்பின் நிர்வாக இயக்குநர் இவ்விவகாரம் தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரிப்பதாகவும் கூறியுள்ளார். இது சிறுபான்மையினர் துறையால் வெளியிடப்பட்ட விளம்பரம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்து அல்லாதவர் என்றும், அவருக்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என விமர்சித்துள்ள பா.ஜ.க. தலைவர்கள், சிறுபான்மை மதங்களுக்கான தன்னுடைய கொள்கையை திணிக்க முயற்சி செய்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ராஜா சிங் ஏற்கனவே இந்த பிரச்சினையை எழுப்பும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து