முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேல்சபை எம்.பி.யாக பதவி ஏற்றார்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் கடந்த ஜூன் 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. அசாம் மாநிலத்தில் இருந்து 5 முறை மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவரை மீண்டும் எம்.பி. ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது எந்த மாநிலங்களிலும் மேல்சபை எம்.பி. பதவி காலியாக இல்லை. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் மேல்சபை எம்.பி.யாக இருந்த மதன்லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து காலியாக இருக்கும் ஒரு இடத்தினை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் மன்மோகன்சிங் நிறுத்தப்பட்டார்.

அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் மன்மோகன்சிங்கை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இதனால் மன்மோகன்சிங் மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிரமிள்குமார் மாத்தூர்  வெளியிட்டார். மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன்சிங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல் மற்றும் ஆனந்த் சர்மா, ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து