வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      இந்தியா
Nirmala sitharaman 2019 02 28

வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச அளவிலேயே பொருளாதாரம் மந்த நிலையில் தான் உள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது. அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரா சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும். கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும். முதலீட்டாளர்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சார்சார்ஜ் வரி நீக்கப்பட்டுள்ளது.

தொழில் கடனை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில் வங்கிகள் ஆவணங்களை திருப்பி தர வேண்டும்.  வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.  சிறு, குறு நிறுவனங்கள் எளிதில் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்..டி வரி 60 நாளில் திரும்ப அளிக்கப்படும்.

தொழில் தொடங்குவோருக்கான வரி விதிப்பு நீக்கப்படும்.  வருமான வரித்துறை நோட்டீசுக்கு 3 மாதத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

வருமான வரித்துறை தொடர்பான நோட்டீஸ், சம்மன் உள்ளிட்ட நடவடிக்கைகள் அக்டோபர் 1 முதல் ஒருங்கிணைக்கப்படும். வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  நிறுவனங்களின் சமூக சேவையில் குறைபாடுகளுக்காக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது. புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவ தனி பிரிவு உருவாக்கப்படும்.  அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணி முடிந்த உடன் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாளில் அளிக்கப்படும்.  தனியார் நிதி நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படும்.  வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்.  பி.எஸ் 4 வாகனங்கள் 2020 மார்ச் மாதத்திற்கு பிறகும் இயங்க அனுமதிக்கப்படும்.  அரசுத்துறைகள் புதிய கார்கள் வாங்க உள்ள தடை விலக்கப்படுகிறது.  பழைய வாகனங்களை ஒழிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.  பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பாக விரைவில் கொள்கை அறிவிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து