ஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      தமிழகம்
jayakumar 2019 02 02

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டமும் இல்லை. அரசியல் ஆட்டமும் இல்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார்.

 
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. குறித்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ஜெயகுமார், அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அமைச்சர் ஜெயகுமார் ஜோக்கர் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்து இருப்பது பற்றி கேட்கப்பட்டது,. அதற்கு பதிலளித்த ஜெயகுமார், ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல. அரசியல் ஆட்டமும் இல்லை. ஜோக்கர் ரோல் மிகப் பெரிய ரோல். ஜோக்கர் சிரிக்க வைப்பான். சிந்திக்க வைப்பான்.  மற்றவர்களை மகிழ வைப்பான். ஆனால் சந்தி சிரிக்க வைக்க மாட்டான். மு.க. ஸ்டாலினின் நடவடிக்கைகள் சந்தி சிரிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்தார். பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து கேட்ட போது, தமிழ்நாட்டு போலீசார் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானவர்கள். போலீசார் அதிக விழிப்புணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள். எனவே பயங்கரவாதிகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒடி ஒளிந்து கொண்டதால் மாற்று வழியை தேடவேண்டியதிருந்தது. சுவரேறி குதித்து கைது செய்யும் நிலையை உருவாக்கியவர் ப.சிதம்பரம்தான். அவருக்கு மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன்? அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் ஏன்? சிதம்பரத்தால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் எந்த பயனும் இல்லை. யாருக்கும் எந்த பயனும் இல்லை. அவரது நிழல் கூட அவரை திரும்பி பார்க்காது. இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து