முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொழும்பு டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டமும் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு : மழையால் கொழும்பு டெஸ்டின் 2-வது நாள் ஆட்டமும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. நேற்று 30 ஓவர்களே வீசப்பட்டன.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. மழை பெய்ததால் 90 ஓவர்களும் வீசப்படவில்லை. 36.3 ஓவர்களே வீசப்பட்டது. இதில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 49 ரன்களுடனும், மேத்யூஸ் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருணாரத்னே அரைசதம் அடித்து, 65 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளை வரை இலங்கை 66 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது.

டி சில்வா 32 ரன்களுடனும், பெரேரா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.இரண்டு நாட்கள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணியின் முதல் இன்னிங்சே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டி டிரா ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து