முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 1812 பேர்களுக்கு ரூ.5 கோடியில்நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி, திருமங்கலம் மற்றும் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜசேகர் தலைமையில், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தலைவர் நிர்வாக இயக்குநர், வெளிநாட்டு மனிதவளக் கழகம் தர்மேந்திர பிரதாப் யாதவ்முன்னிலையில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப வியல் துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 1812 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 70 இலட்சத்து 74 ஆயிரத்து 85 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்  தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் மாவட்;ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்தும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பது குறித்தும், மழைநீர் சேகரிப்பு குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.  மேலும் தனிநபர் கழிப்பறை வசதி, தெரு விளக்கு வசதிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.  மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.  விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.  இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை அனைவரும் பெறுவதற்கு ஏதுவாக இங்கு வருகை புரிந்துள்ள அனைவரும் இத்திட்டங்கள் குறித்தும், திட்டத்தின் பயன் குறித்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜசேகர் கூறுகையில்,
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்படுகிறது. மேற்படி குறைதீர் நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்புத்திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.நகரங்களில் வார்டுகளிலும், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வு காண, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.  இதன் மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்பற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள்.  இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும்.  அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும்.  மேற்குறிப்பிட்ட மனுக்களின் மீதான தீர்விற்குப் பின் செப்டம்பர் மாதத்தில் அமைச்சர் பெருமக்கள் தலைமையிலான வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும் என்றார்.
இந்த முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சித்துறைகள் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதி, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, பட்டா மாறுதல், மானிய விலையில் இடுபொருட்கள், பசுமைவீடுகள், இருபெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  அதன்படி உசிலம்பட்டி வட்டத்தில் 313 பயனாளிகளுக்கு ரூ.27,99,288 மதிப்பிலும், பேரையூர் வட்;டத்தில் 162 பயனாளிகளுக்கு ரூ.18,96,000 மதிப்பிலும், தே.கல்லுப்படடியில் 245 பயனாளிகளுக்கு ரூ.26,11,411 மதிப்பிலும், கள்ளிக்குடி வட்டத்தில் 125 பயனாளிகளுக்கு 11,92,836 மதிப்பிலும், திருமங்கலம் வட்டத்தில் 328 பயனாளிகளுக்கு 43,04,250 மதிப்பிலும், வாடிப்பட்டி வட்டத்தில் 639 பயனாளிகளுக்கு 3,42,70,500 மதிப்பிலும் என மொத்தம் 1778 பயனாளிகளுக்கு ரூ.4,70,74,285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.நீதிபதி,கே.மாணிக்கம்,பெரியபுள்ளான் (எ) செல்வம்,எஸ்.எஸ்.சரவணன்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜோதி சர்மா, மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் பானுகோபன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முருகேசன்,பேரூராட்சி உதவி இயக்குநர் சேதுராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயா, மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம், உதவி இயக்குநர் (நிலஅளவைத்துறை) திரவியம், வாடிப்பட்டி வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார்,சுரேஷ்,கள்ளிக்குடி வட்டாட்சியர்கள் மூர்த்தி,ராமச்சந்திரன், பேரையூர் வட்டாட்சியர்கள் ஆனந்தி,சுரேந்திரன்,உசிலம்பட்டி வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ராமசாமி, உதவி இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பாண்டி, உசிலம்பட்டி வட்டாட்சியர்கள் செந்தாமரை, சிவராமன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து