முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: ராமேசுவரம் கடலோரப்பகுதியில் இந்திய கடலோரக்காவல்படையினர் தீவிர ரோந்து:

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,  தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய பாதுகாப்பு உளவுப்பரிவு எச்சரித்து உள்ளதையடுத்து ராமேசுவரம் தீவு மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள் உள்பட தமிழகம் முழுதும் போலீஸார்கள் மற்றும் இந்திய கடற்படையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்தியாவை சீர்குலைக்கும் விதமாக திட்டமிட்டு வெளிநாட்டு தீவிரவாதிகள் தமிழகம் வழியாக வந்துள்ளதாக மத்திய உளவுப்பிரிவு பாதுகாப்பு துறையினர் மத்திய அரசுக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் பேரில் மத்திய அரசு தமிழகம் முழுவதும் சாலைகள்,கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் பேரில் இலங்கைக்கு மிகவும் அருகாமையில் ராமேசுவரம் உள்பட ராமநாதபுரம் மாவட்ட கடலோரப்பகுதி உள்ளது.இதனால் பாக்ஜலசந்தி,மன்னார்வளைகுடா கடல்பகுதியாந ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் ஆகிய கடலோரப்பகுதியில்  கடந்த இரண்டு நாட்களாக மண்டபம் பகுதியிலுள்ள இந்திய கடலோரக்காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலமும்,ஹோவர்கிராப்ட் கப்பல் மூலமும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுபோல மண்டபம் தென் கடல் பகுதியிலிருந்து தூத்துக்குடி கடல் பகுதிவரை  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.மத்திய,மாநில போலீஸார்கள் கடலோரப்பகுதிகள்,ரயில்வே நிலையம்,கோவில் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தமிழக உளவுப்பிரிவு போலீஸார்கள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோர்ஸ் மூலம் கடலோரப்பகுதிகளில்  விசாரித்துக்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ராமேசுவரம் தீவு பகுதி முழுவதையும் மத்திய,மாநில பாதுகாப்பு போலீஸார்கள் கண்காணித்துகொண்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.இதனால் ராமேசுவரம் தீவு கடலோரப்பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலைகள் காணப்பட்டு வருகின்றன.

 தனுஸ்கோடி சாலையில் போலீஸார்கள் வாகன சோதனை:
ராமேசுவரம் திருக்கோவிலுக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பின்னர் பழமைாயாழ தனுஸ்கோடி பகுதியை பார்வையிட்டு செல்வார்கள்.நேற்று தனுஸ்கோடி பகுதி்ககு வாகனத்தில் சென்று பக்தர்களை கடலோரக்காவல்படை குழுமம் போலீஸார்கள் முழு வாகன சோதனைக்கு பின்னர் அனுப்பி வைத்தனர்.பின்னர் அடையாளம் தெரியாத எந்த நபர்களையும் வாகனத்தில் ஏற்றிச்செல்ல கூடாது.சந்தேகத்தின் பேரில் வாகனத்தை நிறுத்தினால் அப்பகுதியில் வாகனத்தை நிறுத்தாமல் வந்து அருகாமையிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 மீனவர்களுக்கு அறிவுரை கூட்டம்: 
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்கள் ஆதார் மற்றும் மீன்பிடி அடையாள அட்டை கண்டிப்பாக எடுத்து செல்லவேண்டும்.கடலில் சந்தேகத்தின்பேரில் படகுகளை சென்றால் கடலோரக் காவல்படை குழுமம் போலீஸார்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மற்றும் கடலில் யாரும் சந்தேகத்தின்பேரில் நீந்தி வந்தாலும்,மணல் தீட்டுகளில் இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து