முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த சம்பவத்தில் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது.

ஹாங்காங்கில் முக்கிய கிரிமினல் வழக்குகளில் சிக்கி கைதாகிறவர்களை சீனாவுக்கு அனுப்பி வைத்து அங்கு விசாரணையை சந்திக்க வைக்க ஹாங்காங் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான மசோதாவை அங்குள்ள சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து மசோதா கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் மசோதாவை நிரந்தரமாக திரும்பப் பெற வேண்டும், நிர்வாக தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஜனநாயக ஆர்வலர்கள் வார இறுதி நாட்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அங்குள்ள குன்டோங் பகுதியை நோக்கி பல்லாயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் திடமான தொப்பிகள், கண்ணீர்ப்புகையை எதிர்கொள்ள ஏற்ற முகமூடிகளை அணிந்து இருந்தனர். அவர்களை அங்கு குவிக்கப்பட்டிருந்த கலவர தடுப்பு போலீசார் தடுத்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல் எறிந்தனர். பாட்டில்களை வீசினர். தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்தனர்.போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மிளகுத்தூள் வீசினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து