4 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு செப். 23-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
election commission 2019 03 03

புது டெல்லி : சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். அதாவது, தண்டேவாடா (சத்தீஸ்கர்), பாலா (கேரளா), ஹமிர்பூர் (உ.பி), பதார்காட் (திரிபுரா) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பினை தொடர்ந்து நான்கு மாநிலத்தின் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து