பிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      உலகம்
pm modi bahrain 2019 08 25

மனாமா : பிரதமர் மோடி உடனான சந்திப்பை அடுத்து, சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய பக்ரைன் அரசு முடிவு செய்துள்ளளது.

பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து பக்ரைன் நாட்டுக்கு முதல்முறையாக பிரதமர் மோடி சென்றார். இந்தியாவுக்கும், பஹ்ரைனுக்கும் இடையே வலுவான நட்புறவை மலரச் செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு பக்ரைன் நாட்டின் மிக உயரிய  விருது வழங்கப்பட்டது.

மனாமா நகரில் உள்ள ஸ்ரீநாத்ஜி கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றார். புனரமைப்பு பணிகள் முடிந்துள்ள அந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி, அங்கிருந்த இந்தியர்களிடம் உரையாடினார். இதற்கிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பின் எதிரொலியாக நல்லெண்ண நடவடிக்கையாக சிறையில் உள்ள இந்தியக் கைதிகள் 250 பேருக்கு மன்னிப்பு வழங்க பக்ரைன் அரசர் உத்தரவிட்டுள்ளார். நல்ல எண்ண நடவடிக்கையாக 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து