முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் விறுவிறுப்பாக நடந்த வடமாடு எருதுகட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம், -கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில்  வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில்
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு எருதுகட்டு விழா
நடந்தது. விழாவையொட்டி  பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணன் கோவிலில்
சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலுக்கு அருகே உள்ள பிரமாண்டமான திடலில்
5 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில்க ம்பி வேலி அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்ட எருதுகட்டு விழா பேரவைத் தலைவர்
கே. ஆதித்தன் தலைமையில்ஜ ல்லிக்கட்டு வீர விளையாட்டுக்குழுவின்
மாநிலத்தலைவர் பி.ராஜசேகரன் முன்னிலையில் எருதுகட்டு நடைபெற்றது.
சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 காளைகள் சீறிபாய்ந்து பங்கேற்றன.
9 மாடுபிடி வீரர்கள் தங்களின் முழுதிறனையும் வெளிப்படுத்தி காளைகளை பிடிக்கும்
முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 30 அடி நீளமுள்ள கயிற்றின் ஒரு முனையில்
காளை மாடு கட்டப்பட்டு  மறுமுனையில்உ ரலுடன் இணைத்து நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தது.
25 நிமிடங்களுக்குள் காளை மாடுகளை பிடிக்க நேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விறுவிறுப்புடன் நடைபெற்றது.  வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசு பொருட்கள் மற்றும்
ரொக்கத்தொகை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை காஞ்சிரங்குடி யாதவர் சங்கம்,
கிருஷ்ணாபுரம் விளையாட்டுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து