முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன பொருட்கள் மீதான வரிவிதிப்பு: வெள்ளை மாளிகை விளக்கம்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், சீன பொருட்கள் மீதான வரியை இன்னும் கூடுதலாக உயர்ந்தி இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருத்தம் அடைந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜி - 7 நாடுகள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் சீன பொருட்கள் மீது கடந்த வாரம் வரியை அதிகரித்தது குறித்து பத்திரிகையாளர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர், ஆமாம் இது தொடர்பாக தனக்கு மற்றுமொரு எண்ணம் இருந்ததாக ட்ரம்ப் தெரிவித்தார். சீன பொருட்கள் மீதான வரியை ஏற்றியது குறித்து ட்ரம்ப் மாற்றுக்கருத்து என்பது கருத்துகள் ஊடகங்களில் பரவியது. இதையடுத்து ட்ரம்பின் பதில் குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கிரிஸ்ஷம் கூறும்போது, ”ட்ரம்பின் பதில் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சீனா மீதான வரியை இன்னும் கூடுதலாக உயர்த்தி இருக்கலாம் என்று ட்ரம்ப் வருத்தமடைந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

வர்த்தக விவகாரங்களில் சீனாவும், அமெரிக்காவும் தற்போது கடுமையாக மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். மேலும் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதலாக 5 சதவீதம் வரி விதித்தார்.   

இதையடுத்து சீனாவும் பதில் நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 ஆயிரத்து 78 பொருட்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்தது. இதுமட்டுமின்றி, 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது.

இந்தநிலையில் கடும் கோபம் கொண்டுள்ள அதிபர் ட்ரம்ப் சீன பொருட்களுக்கு மேலும் 5 சதவீத கூடுதல் வரியை கடந்த வாரம் விதித்தார். இதுமட்டுமினறி சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து