முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பேசி தீர்த்து கொள்ளும்-டிரம்ப் நம்பிக்கை

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

பியாரிட்ஸ் : ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகள் இடையிலான பிரச்சினை. தங்களது பிரச்சினைகளை அவர்களே பேசி தீர்த்து கொள்வார்கள் என அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப் கூறினார்.

ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பியாரிட்சில் நேற்று நடந்தது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிபட்ட முறையில் அழைப்பு விடுத்து இருந்தார்.

இதையடுத்து உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். உச்சிமாநாட்டிற்கு முன் ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் தூதர் சுரேஷ் பிரபும் மாநாட்டில் கலந்து கொண்டார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிற தலைவர்களை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, "இந்தியாவும் - அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என மோடி உறுதி அளித்தார். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பை சேர்ந்தவை , அதனால்தான் அவை குறித்து வேறு எந்த நாட்டையும் நாங்கள் அனுமதிப்பது இல்லை.

1947க்கு முன்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தன. எங்கள் பிரச்சினைகளை விவாதிக்கலாம் மற்றும் அவற்றை தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என பிரதமர் மோடி கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறும் போது,

"காஷ்மீர் பற்றி நாங்கள் பேசினோம். காஷ்மீர், கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி உணர்கிறார். அவர்கள் பாகிஸ்தானுடன் பேசுகிறார்கள், அவர்களால் மிகச் சிறப்பாக ஏதாவது செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகள் இடையிலான பிரச்சினை. இந்தியாவும் - பாகிஸ்தானும் தங்களது பிரச்சினைகளை தாங்களே பேசி தீர்த்து கொள்ளும்" என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து