முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் டி.வி.க்களுடன் போட்டி போடும் வகையில் தமிழக அரசின் கல்வி டி.வி.யின் 24 மணிநேர ஒளிபரப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தனியார் டி.வி.க்களுடன் போட்டி போடும் வகையிலும், கல்வித் துறை செயல்பாட்டை மாணவர்கள், ஆசிரியர்கள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள ஏதுவாகவும், கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது கல்வித் தொலைக்காட்சியின் லோகோ மற்றும் பாடல் ஒளிபரப்பப்பட்டது.நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசினார். சபாநாயகர் ப.தனபால் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாழ்த்துரை வழங்கினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். விழா மேடையில் சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசாக புத்தகங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, டாக்டர் வி.சரோஜா, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆர்.துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, எம்.ஆர். விஜயபாஸ்கர், க. பாண்டியராஜன் உள்ளிட்டோர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் டாக்டர் எஸ்.கண்ணப்பன், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து