முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றியை பெற்ற இந்திய கேப்டன் விராட் கோலி

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

ஆண்டிகுவா : வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றியை பெற்ற இந்திய கேப்டன் விராட் கோலி என்ற சாதனையை படைத்துள்ளார்.

எல்லா பெருமைகளும் அணியைத்தான் சேரும் என்று கங்குலி சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகை பெற்ற இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.இதற்கு முன் கங்குலி வெளிநாட்டு மண்ணில் 28 போட்டிகளில் 11-ல் வெற்றிகளை தேடிக்கொடுத்திருந்தார். அந்த சாதனையை தற்போது விராட் கோலி 26 போட்டிகளில் 12-ல் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.எம்.எஸ். டோனி தலைமையிலான இந்தியா அணி 30 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 17 ஆட்டத்தில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து விராட் கோலி கூறுகையில், இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். என்றாலும், இந்த சாதனை மிகவும் வலிமை வாய்ந்த அணியால் மட்டுமே கிடைத்தது. அணியைத் தவிர்த்து நான் மட்டும் இந்த சாதனையை தன்வசமாக்கிக் கொள்ள நினைக்கவில்லை.முடிவு எடுப்பது நானாக இருந்தாலும், அதை சிறப்பாக வெளிப்படுத்தி அறுவடை செய்வது அணியின் சக வீரர்கள்தான். நாங்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறோம். இதனால்தான் வெற்றிகளை குவிக்க இயலுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து