முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெட்லியின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி நேற்றுநேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லிக்கு கடந்த 9-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

முன்னதாக அருண் ஜெட்லியின் மறைவு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், அருண் ஜெட்லி அரசியலில் ஜாம்பவான் ஆவார். இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராவார். அவரது மறைவு மிகுந்த மனவேதனையானது. ஜெட்லியின் மனைவி மற்றும் மகனிடம் எனது இரங்கலை தெரிவித்தேன். பா.ஜ.க.விற்கும், அருண் ஜெட்லிக்குமான பந்தம் பிரிக்க முடியாத ஒன்று. அவசர காலங்களில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அவர் முன்னணியில் இருந்தார். அவர் கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தக் கூடிய எங்கள் கட்சியின் மிகவும் விரும்பப்பட்ட முகமாக மாறினார் என கூறியிருந்தார். ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இதனையடுத்து நேற்று காலை பிரதமர் மோடி, மறைந்த அருண் ஜெட்லியின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து