முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பாட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி. சிந்து பிரதமரை சந்தித்து வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பி.வி. சிந்து - நஸோமி ஓகுஹரா ஆகியோர் மோதினர். இம்முறை தங்கம் வெல்லும் முனைப்புடன் சிந்து அதிரடியாக விளையாடி புள்ளிகளை குவித்தார். அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓகுஹரா ஸ்தம்பித்து நிற்க, முதல் செட்டை 21-7 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த அவர் 21-7, 21-7 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 38 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்துள்ள சிந்துவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, நேற்று டெல்லி வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூயை நேரில் சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். அப்போது வரலாறு படைத்ததன் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் பி.வி.சிந்து என்று கிரண் ரிஜிஜூ புகழாரம் சூட்டியுள்ளார். எதிர்காலத்திலும் பல போட்டிகளில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இந்தியாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்றும் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார். மேலும், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை பி.வி.சிந்துவிடம் மத்திய அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வழங்கினார்.

இந்நிலையில், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் பெருமை, ஒரு தங்கத்தையும் ஏராளமான பெருமையையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த சாம்பியன் பி.வி.சிந்து. அவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து