முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. மரணம்

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. கஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா நேற்று முன்தினம் இரவு மும்பையில் மறைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவரது உயிர் நேற்று முன்தினம் பிரிந்தது. அவருக்கு 70.

1973-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானார். 2004-ல் உத்தர்காண்ட் மாநிலத்தின் டி.ஜி.பி.யாக அவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. என்ற பெருமையை அவர் பெற்றார். 2007 அக்டோபர் 31-ல் அவர் ஓய்வு பெற்றார். பணிக்காலத்தில் 1989, 1997 என இரண்டு முறை ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார். 2004-ல் ராஜீவ் காந்தி விருதும் பெற்றார். இவர் இந்தியாவின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும், முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓய்வுக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அவர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹரித்வார் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற இயலவில்லை. இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கஞ்சன் மறைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உத்தர்கண்ட் மாநில போலீஸாரின் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், உத்தர்காண்ட காவல்துறை சார்பில் கஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யாவின் மறைவுக்கு ஆழ்ந்து இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து