முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா ஏழை நாடு இல்லை - இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : இந்தியா ஒன்றும் ஏழை நாடு இல்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது கடந்த 14-ம் தேதியன்று புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்க்கோட்டில் பயணிக்கத் துவங்கியது. நிலவின் சுற்றுவட்டப் பாதை பயணித்துக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் சிவன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

வெளிநாடுகளை சேர்ந்த சிலர் இந்தியா ஒரு ஏழை நாடு என கூறுகிறார்கள். மேலும், ஏழை நாட்டிற்கு எதற்கு விண்வெளி தொழில்நுட்பம் என கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறுவதாவது, இந்தியா ஒரு ஏழை நாடு என நீங்கள் நினைக்கின்றீர்களா? இந்தியா ஒன்றும் ஏழை நாடு இல்லை. பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. வாங்கும் திறனில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் வியக்கத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளோம். விண்வெளித்துறை இன்றைய வாழ்வில் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இந்தியா தனது வளங்களை அதன் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்துகிறது. உலக அளவில் இத்தகைய நிலையில் உள்ள இந்தியா ஒன்றும் ஏழை நாடு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து