முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை ஆதாய பதவி: செப். 26-ல் ஆஜராக டிராவிட்டுக்கு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ராகுல் டிராவிட் துணை தலைவர் பதவியில் உள்ளார். ஆனால், அவரை பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி என்.சி.ஏ.வின் தலைவராக பி.சி.சி.ஐ. நியமித்தது. ஏற்கனவே இந்தியா சிமெண்ட்ஸ் பதவியுடன், என்.சி.ஏ. பதவியும் வகித்தால், அது இரட்டை ஆதாய பதவி வகிப்பதாகும் என மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் அளித்தார். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதில் தருமாறு டிராவிட்டுக்கு ஏற்கெனவே பி.சி.சி.ஐ. நெறிமுறைகள் அலுவலர் டி.கே.ஜெயின் அறிவுறுத்தியிருந்தார்.

பி.சி.சி.ஐ. சட்டவரையறைபடி, ஒருவர் ஓரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்க முடியாது என்பதுதான். இதன் தொடர்ச்சியாக வரும் செப். 26-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக டி.கே.ஜெயின் தெரிவித்தார்.

இதுகுறித்து, டிராவிட் கூறுகையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து நான் நீண்ட நாள் விடுப்பில் உள்ளேன். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து