முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் இடம்பிடித்த படேல் சிலை: பிரதமர் மகிழ்ச்சி

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

2019-ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் படேல் சிலை இடம் பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறப்பான செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளார். ஒற்றுமையை வலியுறுத்தும் படேலின் சிலை 2019-ம் ஆண்டுக்கான உலகில் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர்தான் சிலை நிறுவப்பட்ட பின்னர் ஒரே நாளில் 34,000 பேர் அதனை பார்த்து ரசித்தனர் என்ற சாதனை செய்தி வெளியானது. படேல் சிலை பிரபலமான சுற்றுலா தலமாக உருவாவது தொடர்பான செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான சிலை என்ற அந்தஸ்தை கொண்ட படேலின் ஒற்றுமையின் சிலை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளன்று நிறுவப்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை இணைத்தவர் என்பதால் படேல் சிலைக்கு ஒற்றுமையின் சிலை எனப் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து