முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் பாலத்தை கட்டியது இந்திய பொறியாளர்கள்: மத்திய அமைச்சர் பொக்ரியால் பேச்சு

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ராமர் பாலத்தை இந்திய பொறியாளர்கள் கட்டியதாகவும், உலகிலேயே சமஸ்கிருதம் தான் பழமையான முதல் மொழி எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கூறினார். கரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

யாருக்கும் இருவேறு கருத்துகள் இருப்பது இயல்பு தான். நம்நாட்டில் எவ்வளவு சிறந்த தொழில்நுட்பங்கள் இருந்துள்ளன. நமது பொறியாளர்களின் திறமை எப்படிப்பட்டது. ராமர் பாலம் பற்றி நாம் பேசினால் அதைகட்டிய பொறியாளர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியை சேர்ந்தவர்களா என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ராமர் பாலத்தை கட்டியவர்கள் இந்திய பொறியாளர்கள். இதனை பார்த்து உலகமே வியக்கிறது. இதுபற்றி ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

சமஸ்கிருதம் தான் உலகின் முதல் மொழி. அதற்கு முன்பாக எந்த ஒரு மொழியும் இருந்ததாக யாரலும் நிருபிக்க முடியாது. இதை நாங்கள் கூறும் போது சிலர் விமர்சிக்கலாம். ஆனால் எதிர்ப்பவர்கள் இதனை நிருபிக்க வேண்டும்.

சமஸ்கிருதம் தெய்வமொழி. அறிவியல்பூர்வமான மொழி. அதே போல் முதல் புத்தகம் வேதம்தான். அதற்கு முன்பாக எந்த புத்தகம் இருந்துள்ளது. இதை உலகமே சொல்கிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் இதனையும் நிருபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து