ஜம்மு காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019      உலகம்
jammu and kashmir 2018 10 16

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா உதவியுடன் அந்த நாடு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அவர் இரண்டு முறை அறிவித்தார். ஆனால் இதை இந்தியா நிராகரித்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிட விரும்ப மாட்டோம் என்று தெரிவித்தது. இதை ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்பிடம் உறுதிபடுத்தினார். இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து