முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பதான்

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைக்க மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறார் இர்பான் பதான்.

இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் அணிகளில் ஒன்று ஜம்மு - காஷ்மீர். ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரா, சையத் முஸ்டாக் அலி தொடர்களில் அந்த அணி விளையாடி வருகிறது. விரைவில் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிறது. அந்த அணியின் வீரராகவும், ஆலோசகராவும் இர்பான் பதான் உள்ளார். இவர் தொடருக்கு தயாராக வீரர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் அங்கு இன்னும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக தகவல் தொடர்பு தடையால் எந்தவொரு வீரரையும் இர்பான் பதானால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் சி.இ.ஓ.-வாக இருக்கும் ஆஷிக் அலி புகாரியை தொடர்பு கொண்டுள்ளார். அவர் முன்னாள் டிஐஜி.

உள்ளூர் டிவி மூலம் மாலை நேரத்தில் விளம்பரம் கொடுத்தால் அது மக்களிடையே பேசப்பட்டு வீரர்களை சென்றடையும். அதன்மூலம் அவர்களை தொடர்பு கொள்ளலாம் எனபுகாரி ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் இர்பான் பதான் வீரர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து இர்பான் பதான் கூறுகையில், காஷ்மீர் மற்றும் அங்குள்ள மாவட்டங்களில் உள்ள வீரர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஜம்மு வீரர்களுடன் தொடர்பில் உள்ளோம். டி.வி.-யில் விளம்பரம் கொடுத்ததன் மூலம் ஜம்முவில் நடக்கும் பயிற்சி முகாமுக்கு தேர்வான வீரர்கள் வருவார்கள் என நம்புகிறேன். முதல் நாளில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு தனித்தன்மை வாய்ந்த சூழ்நிலை. இதற்கு முன் நான் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து