முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நிலநடுக்கம் 6.1 ரிக்டராக பதிவானது

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஹொக்கைடோ : ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது.  பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர். தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் அடைந்ததாகவோ, உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை. இந்த அளவிற்கு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டபோதிலும், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து