முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப். 27-ல் ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசுவார் என்று தெரிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சனைகள் பற்றிய விவாதம் நடைபெறும். அதில் உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை பாகிஸ்தான் மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஈடுபட்டுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்பட பெரும்பாலான முக்கிய நாடுகள் பாகிஸ்தானின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் நடக்கும் ஐ.நா.சபை கூட்டத்தில் காஷ்மீர் பற்றியும் விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரோஷி கடிதம் எழுதியுள்ளார். முக்கிய பிரச்சனைகள் பற்றிய பட்டியலில் காஷ்மீரை சேர்த்து விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஐ.நா.சபை இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்த மாதம் நடக்கும் ஐ.நா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27-ம் தேதி மோடி முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசுவார் என்று தெரிகிறது. ஐ.நா சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி பேசிய பிறகு இம்ரான்கான் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ.நா. சபை கூட்டத்தில் அனல்பறக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து