முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரனுக்கு ரூ. 112 உயர்வு: தங்கம் விலை ரூ. 30 ஆயிரத்தை நெருங்கியது

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் நேற்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 29,816-க்கு விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அசுர வேகத்தில் உயர்ந்த வண்ணமே உள்ளது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 26 ஆயிரத்து 480-க்கு விற்றது. அதன்பின் தங்கம் விலையில் ஏற்ற நிலையே இருந்தது. விலை சற்று குறைந்தாலும், அதிகரிக்கும் விலை அதிகமாக இருந்ததால் ஜெட்வேகத்தில் சென்றது. இம்மாத 3-வது வாரத்தில் தங்கம் விலை ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் ரூ. 30 ஆயிரத்தை தங்கம் விலை தொடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தங்கம் விலையில் நேற்று புதிய உச்சமாக ரூ.112 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 29 ஆயிரத்து 816-க்கு விற்பனையானது.  கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ. 3 ஆயிரத்து 727 ஆக உள்ளது. கடந்த 4 வாரங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3 ஆயிரத்து 336 அதிகரித்து இருக்கிறது. தங்கம் விலை ரூ. 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பொது மக்களை அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் உலக சந்தையில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்து வருவதும் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 300 உயர்ந்து ரூ. 52 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 52.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து