முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கமே: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

லடாக்  : கில்ஜித், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கமே என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனால், அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக லடாக்கிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று சென்றார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. உண்மை என்னவெனில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் - பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்பதே.

இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை அந்த நாடு கைவிட வேண்டும். பயங்கரவாதத்தால், இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிக்கும் போது, நாம் எப்படி அந்த நாட்டுடன் பேச்சுவாரத்தை நடத்த முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து