முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் கடற்பகுதியில் பாக். கமாண்டோக்கள் ஊடுருவல்? உளவுத்துறை எச்சரிக்கையால் தீவிர கண்காணிப்பு

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

கான்ட்லா : கடலுக்கு அடியில் மூழ்கி சென்று தாக்குதல் நடத்தக் கூடிய பயிற்சி பெற்ற பாகிஸ்தான் கமாண்டோக்கள் குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதிக்குள் ஊடுருவி இருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், குஜராத் கடற்கரைப் பகுதி முழுவதும், துறைமுகங்களிலும் உச்சகட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பதற்றமான சூழலை உருவாக்கும் பொருட்டு எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்தும், போர் விமானங்களையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

இந்த சூழலில் குஜராத்தின் கட்ச் வளைகுடாவின் ஹரிமா நலா கிரீக் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த இரு சிறிய மோட்டார் படகுகள் கேட்பாற்று நின்றிருந்ததை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். ஆனால் அந்தப் படகுகளில் ஆயுதங்கள் ஏதும் இல்லை. பாகிஸ்தான் படகு குறித்து விசாரணை நடத்தியதில் பாகிஸ்தான் கமாண்டோக்கள் ஊடுருவியிருக்கக்கூடும் என்று உளவுத்துறை மூலம் தெரியவந்தது.

இது குறித்து பி.எஸ்.எப். செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் உள்ள ஹராமி நல்லா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு சிறிய மோட்டார் படகுகள் காணப்பட்டன. அதன் அருகே சென்ற போது அங்கு யாரும் இல்லை. படகிலும் எந்தவிதமான ஆயுதங்களும் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்தில் கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள், நீருக்குள் மூழ்கி தாக்குதல் நடத்தும் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் கட்ச் வளைகுடா பகுதிக்குள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். உளவுத்துறையின் தகவலும் இதையே தெரிவிக்கிறது. இதனையடுத்து கான்ட்லா துறைமுகம், அதானி துறைமுகம், முந்த்ரா துறைமுகம் ஆகியவற்றுக்கு உச்சகட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து