முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய விளையாட்டுத் தினத்தை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், தேசிய விளையாட்டுத் தினத்தை மும்பை பாந்த்ராவில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்.மும்பை பாந்த்ராவில் உள்ள புனித அந்தோனி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் கலந்துரையாடியும், அவர்களுடன் கதைகள் பேசியும், கேரம் விளையாடியும், புகைப்படம் எடுத்தும் சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.இந்தியாவின் முன்னாள் ஹாக்கி கேப்டன் மேஜர் தயான்சந்தின் பிறந்தநாளான இன்று தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தேசிய விளையாட்டுத் தினமான இன்று பிரதமர் மோடி டெல்லியில் ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்தியர்கள் அனைவரும் விளையாட்டை அன்றாக வாழ்க்கையில் கைக்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படுவருமான சச்சின் டெண்டுல்கர் தேசிய விளையாட்டுத் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.மும்பை பாந்த்ராவில் உள்ள புதிய அந்தோனி முதியோர் இல்லத்துக்கு இன்று காலை சென்ற சச்சின் டெண்டுல்கர் அங்கு தங்கி இருக்கும் முதியோர்களுடன் உரையாடினார். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்த சச்சின் டெண்டுல்கர் அவர்களுடன் கலந்துரையாடியும், கதைகள் பேசியும், கேரம் விளையாடியும் தேசிய விளையாட்டுத் தினத்தை கொண்டாடினார்.இதுதொடர்பாக 45 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோவையும் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், " புனித அந்தோனி முதியோர் இல்லத்தில் உள்ள வியக்கத்தக்க மனிதர்களுடன் நான் தேசிய விளையாட்டுத் தினத்தை கொண்டாடினேன். ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன்,அவர்கள் என்மீது அன்பை பொழிந்தார்கள். முதியோர்களுடன் கேரம் விளையாடியது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது. நம்முடைய பிரதமர் மோடி கூறுவதைப் போல் அனைவருக்கும் விளையாட்டும், உடல்தகுதியும் அவசியம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல குத்துச்சண்டை வீராங்கனையும் உலக சாம்பியனுமான மேரி கோமும் தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்டுள்ளார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து