முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 2-ம் தேதி டொரியன் புயல் கரையை கடக்கும்

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

டொரியன் புயல் வரும் திங்கட்கிழமையன்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கரையை கடக்கும் என தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

கரீபியன் தீவுகள் அருகே டொரியன் புயல் மையம் கொண்டிருந்தது. அங்கிருந்து நகரத் தொடங்கியதால், போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகள் போன்ற இடங்களில் கடும் மழையும் காற்றும் சுழன்றடித்தது.  இந்நிலையில் சக்திவாய்ந்த டொரியன் புயல் புளோரிடா மாநிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இது வரும் திங்களன்று மதியம் 2 மணிக்கு மத்திய புளோரிடாவில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புளோரிடாவின் 26 மாவட்டங்களுக்கு அந்த மாகாண ஆளுநர் ரோன் டிசன்டிஸ், புயல் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரையை கடக்கும் போது மத்திய புளோரிடாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவிலும் 12 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடாவிலிருந்து தெற்கு மற்றும் வட கரோலினா வரை, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வரவிருக்கும் நாட்களில் டொரியன் புயலின் வலிமை அதிகரிக்கும், மேலும் இது வார இறுதியில் பஹாமாஸின் சில பகுதிகளையும் புளோரிடாவின் பெரும்பகுதியையும் பாதிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசுமுறை பயணமாக போலந்து செல்லவிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். டொரியன் மிகவும் சக்திவாய்ந்த புயல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை ஏற்பாடுகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கவனிக்க நாட்டிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் போலந்துக்கு செல்லவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து