முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுடன் கமல்நாத் திடீர் சந்திப்பு: ம.பி. காங்கிரஸூக்கு புதிய தலைவர் விரைவில் நியமனம்?

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராகுலின் முடிவை ஆதரித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

 
பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்தார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் ஓரிடத்தில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இதைத் தொடர்ந்து முதல்வர் கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே உச்சபட்ச பனிப்போர் நிலவி வருகிறது. சமீப காலமாக சிந்தியா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் கூட, கட்சியின் நிலைப்பாட்டை மீறி மோடி அரசின் செயல்பாடுகளை அவர் ஆதரித்து பேசினார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கமல்நாத் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடித்து வரும் கமல்நாத்தை மாற்றி விட்டு, அந்த இடத்துக்கு ஜோதிராதித்ய சிந்தியாவை நியமிப்பது பற்றியும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கமல்நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய பிரதேசத்தில் காங்கிரசை வலுப்படுத்துவது தொடர்பாக சோனியா காந்தியுடன் விவாதித்தேன். கட்சி அமைப்புகளில் மாற்றம் செய்வது பற்றியும் ஆலோசித்தோம். ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கோபம் எதுவும் இல்லை. கட்சிக்கு விரைவில் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதிய நபர் நியமிக்கப்படலாம். இதை நான் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். யார் நியமிக்கப்பட்டாலும் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து