முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு ஜோகோவிச், செரீனா தகுதி

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு ஜோகோவிச், செரீனா ஆகியோர் தகுதிபெற்றனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் மழை காரணமாக குறைவான ஆட்டங்களே நடந்தன. ஆண்கள் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-3), 6-1 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் ஜூவான் இக்னாசியோ லன்டிரோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டாமிர் சும்ஹூரை (போஸ்னியா) விரட்டியடித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 37 வயதான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான 17 வயது கேத்ரின் மெக்னாலியை போராடி வீழ்த்தினார். உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வெளியேற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து