முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவின் சுற்று வட்டப்பாதையில் 4-வது நிலைக்கு முன்னேறிய சந்திரயான்

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் 4-வது நிலைக்கு நேற்று வெற்றிகரமாக முன்னேறியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்- 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, கடந்த 14-ம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்க துவங்கியது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், கடந்த 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் நிலவின் 4-வது நிலைக்கு முன்னேறியுள்ளது. இதனை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சந்திரயான் - 2 செப்டம்பர் 7-ம் தேதி திட்டமிட்டப்படி அதிகாலை 1.55 மணி அளவில் நிலவில் தரை இறக்கப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து