அமேசான் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்காவின் உதவியை நாடும் பிரேசில்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      உலகம்
Amazon fire Brazil 2019 08 31

பிரேசிலியா  : அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவுவதாக கூறும் போது நிராகரித்த பிரேசில் நாடு, தற்போது அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.

உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதையடுத்து சமீபத்தில் நடந்த ஜி7 மாநாட்டில், ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசானில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த அறிவிப்பை பிரேசில் நாடு நிராகரித்தது. மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என திட்டவட்டமாக கூறியிருந்தது.

இந்நிலையில் அமேசான் காடுகளில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது பிரேசில். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரேசில் அதிபர் போல்சனரோ, தனது மகன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை வாஷிங்டன் அனுப்பினார். தனையடுத்து பிரேசில் அதிபர் போல்சனரோவின் மகன் ஜெய்ர் போல்சனரோ மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தனர். அமேசான் காட்டுத்தீயை அணைக்க பிரேசில் அரசின் முயற்சி சிறப்பாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை சுட்டிக்காட்டிய போல்சனரோ, தற்போது அமெரிக்க அரசின் உதவியை கேட்டிருப்பதாக கூறியுள்ளார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து