கால்வாயில் பஸ் கவிழ்ந்து விபத்து: பாக். கில் 24 பேர் பலி

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      உலகம்
pakistan bus accident 2019 08 31

பெஷாவர் : பாகிஸ்தானில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பக்ரு என்ற இடத்தில் இருந்து கண்டியா என்ற பகுதிக்கு 35 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, அங்குள்ள பாலம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கீழே சென்று கொண்டிருந்த கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 24 பேர் பலியாகினர். விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து