முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் ஏவுகணை சோதனை தோல்விக்கு அமெரிக்கா காரணமில்லை: டிரம்ப்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஈரான் சமீபத்தில் நடத்திய ஏவுகணை சோதனை தோல்விக்கு அமெரிக்கா காரணமில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் சமீபத்தில் நடத்திய ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்ததாகவும் இதில் அமெரிக்காவின் தலையீடு ஏதும் இல்லை என்றும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அதற்குரிய ஆதாரப் படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரானின் ஏவுகணைத் தளமான சிம்னனில் சபிர் எஸ்.எல்.வி ஏவுகணை தொடர்பான இறுதி ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்தது. இது தொடர்பான காரணத்தைக் கண்டறிய ஈரானுக்கு வாழ்த்துகள் என்று ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்த படத்துடன் பதிவிட்டிருந்தார். ஆனால், ஏவுகணைச் சோதனையில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் ரகசியத்தை டிரம்ப் வெளியிட்டு இருப்பதாகவும் இதற்கு முன்னர் இருந்த அதிபர்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து