முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி வரும் 4, 5-ம் தேதிகளில் ரஷ்யாவில் நடக்கும் இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க  உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 4- 5 தேதிகளில் ரஷ்யாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் வருடாந்திரம் நடக்கும் இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்திய கடற்படையின் பிராஜெக்ட்-751 திட்டத்தின் கீழ் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் 6 நீர்முழ்கிக்கப்பல்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க கையெழுத்திடவுள்ளதாக கூறப்படுகிறது. கடற்கொள்ளையர்களை மறைந்திருந்து தாக்கி விரட்டியடிப்பது இதன் சிறப்பம்சங்களாகும். மேலும், ஐந்தாம் தலைமுறையின் எஸ்யூ-57 ரக போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் புதிதாக 6 அணுஉலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, புதிய 6 அணு உலைகளை ரஷ்யா அமைத்துத் தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவிலிருந்து ரூ. 22,000 கோடிக்கு அகுலா வகையை சேர்ந்த அணுசக்தியால் இயங்கும் சக்ரா-3 அதிநவீன நீர்முழ்கிக் கப்பலை இந்திய கடற்படை குத்தகைக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து