முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதாரண வகுப்புக்கு ரூ.15 - ஏ.சி.க்கு ரூ. 30: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு சேவை கட்டணம்: இன்று முதல் அமல்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இன்று முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது அதன்படி சாதாரண வகுப்புக்கு ரூ.15, ஏ.சி. வகுப்புக்கு ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இ-டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஏ.சி வகுப்புக்கு ரூ. 40, ஏ.சி அல்லாத வகுப்புக்கு ரூ. 20-ம் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, பொதுமக்களை மின்னணு பரிமாற்றத்துக்கு ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக இ-டிக்கெட்டுகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், இந்த சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக ஆன்லைன் டிக்கெட் வருவாய் கடந்த 2016-17ம் ஆண்டில் 26 சதவீதம் குறைந்தது. இந்த சேவை கட்டணம் ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் இ-டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவை கட்டணம் விதிக்கலாமா என ரயில்வே வாரியத்துக்கு, ஐ.ஆர்.சி.டி.சி. கடிதம் எழுதியிருந்தது. இது குறித்து நிதித்துறை அமைச்சகத்திடம் ரயில்வே வாரியம் ஆலோசித்தது. சேவை கட்டணம் ரத்து எனபது தற்காலிக நடவடிக்கைதான், எனவே, இ-டிக்கெட்டுகளுக்கு ரயில்வே அமைச்சகம் மீண்டும் சேவை கட்டணம் விதிக்கலாம் என கூறியது. இதையடுத்து இ-டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவை கட்டணம் விதிக்க ஐ.ஆர்.சி.டி.சி.க்கு, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து