முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதியை சந்தித்து பி.வி சிந்து வாழ்த்து பெற்றார்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிவி சிந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள பர்செல் நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

நாட்டுக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணமாய் இருக்கிறது.இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைத்து பெருமை சேர்த்த பி.வி.சிந்து டெல்லிய திரும்பியபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று முத்திரை பதித்த பி.வி.சிந்து நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தெலுங்கானா தலைநகரம் ஐதராபாத்தில் உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வீட்டுக்கு சென்ற பி.வி.சிந்து, அவரிடம் தங்கப் பதக்கத்தை காட்டி வாழ்த்து பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து