முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் இணைந்து பார்க்க லக்னோ மாணவி தேர்வு

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி : பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் சேர்ந்து பார்க்க முதல் ஆளாக லக்னோ மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது.

புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து சந்திரயான்-2 ஆகஸ்டு 14-ந்தேதி விலகி நிலவை நோக்கி பயணித்தது. அதன்பின் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. நிலவை சுற்றி வந்த சந்திரயான்-2வின் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இதில் 4-வது மற்றும் கடைசி சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் சுற்றி வரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் நிலவுக்கு மிக அருகில் சந்திரயான்-2 சென்றுள்ளது.

சந்திரயான்-2 வருகிற 7-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் தரை இறங்குகிறது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்க்கிறார். இதற்கிடையே மோடியுடன் சேர்ந்து சந்திரயான்-2 நிலவில் தரை இறங்குவதை மாணவ- மாணவிகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டன.

இதற்காக ஆன்லைனில் குவிஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 2 மாணவர்கள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில் பல்வேறு மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பதில் அளித்தனர்.

இதில் லக்னோவைச் சேர்ந்த ரஷிவர்மா என்ற மாணவி வெற்றி பெற்றார். இவர் லக்னோவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக மாணவி ரஷிவர்மா கூறும்போது வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியுடன் பேச விரும்புகிறேன். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து