முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் செயலி மூலம் இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் புதிய செயலியை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது  திருத்தங்களை அவர்களே மேற்கொள்ளும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை அவர்களே சிறப்பு செயலி மூலம் மெற்கொள்ளும் திட்டம் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களது பெயர், பிறந்த தேதி. முகவரி. புகைப்படம் மற்றம் பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்களை அவர்களே மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக vn.v.s.p மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி 1950 அழைப்பு மையம் (மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு மட்டும்), வாக்காளர் உதவி மையத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகம் மற்றும் இ - சேவை மையம் ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தனது வாக்காளர் புகைப்பட அடையாள எண்ணை உள்ளீடு செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில், ஒன்றை கொண்டு திருத்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

அவ்வாறு, வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குசாவடி நிலை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திருத்தங்கள் சரிபார்க்கப்பட்டு 15-ம் தேதி வெளியிடப்படவிருக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். மேலும் நவம்பர் 2 , 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குசாவடிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம். எனவே, வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து