முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படிப்பதற்காக கல்லூரி மாணவிகளை தங்களது வீடுகளுக்கு பேராசிரியர்கள் அழைக்க கூடாது - சென்னை பல்கலைக் கழகம் உத்தரவு

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : படிப்பதற்காக கல்லூரி மாணவிகளை பேராசிரியர்கள் வீடுகளுக்கு அழைக்க கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் தொந்தரவு என்பதே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. படிப்பதற்காக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகளை தங்களது வீடுகளுக்கு அழைக்கக் கூடாது. பேராசிரியர்கள் அழைத்தாலும் அவர்களது வீடுகளுக்கு மாணவிகள் யாரும் செல்லக் கூடாது. அதே போன்று பேராசிரியர்களுடன் கல்லூரிச் சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.

அவ்வாறு ஆசிரியர்களின் வீடுகளுக்கோ அல்லது கல்விச் சுற்றுலாவோ செல்லவோ நேர்ந்தால், மாணவிகள் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று விட்டுச் செல்ல வேண்டும். மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையிலான பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் அல்லது துணை வேந்தரிடமும் நேரடியாக வந்து முறையிடலாம். தங்களது புகாரை மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும் பட்சத்திலே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எந்த பிரச்னையாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகத்தையோ அல்லது நியமிக்கப்பட்ட குழுவையோ மாணவிகள் அணுகலாம். பேராசிரியர்கள் மீது புகார் வரும்பட்சத்தில் அது உடனடியாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து