முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 தனியார் துறை வல்லுநர்கள் மத்திய இணைச் செயலாளர்களாக நியமனம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தனியார் துறையில் பல்வேறு பிரிவுகளில் வல்லுநர்களாக இருந்த 9 பேரைத் தேர்வு செய்து, பல்வேறு அமைச்சகங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில் இணைச் செயலாளர்களாக மத்திய அரசு நியமித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான நியமன அமைச்சரவைக் குழு இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களி்ல் நியமிக்கப்பட்ட இந்த 9 இணைச்செயலாளர்களும் அடுத்த 3 ஆண்டுகளுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பதவியில் இருப்பார்கள். இந்த 9 இணைச்செயலாளர்களுக்கும் ஊதியம் 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் வழங்கப்படும். இவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து இவர்களின் நியமனம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் துறையில் ககோலி கோஷ், விமானப் போக்குவரத்து துறையில் அமர் துபே, வணிகத்துறையில் அருண் கோயல், பொருளாதார விவகாரத்துறையில் ராஜீவ் சக்சேனா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் சுஜித் குமார் பாஜ்பாய், நிதிச்சேவையில் சவுரவ் மிஸ்ரா, புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் தினேஷ் தயானந்த் ஜகதலே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பிரிவில் சுமன் பிரசாத் சிங், கப்பல்போக்குவரத்து துறையில் பூஷன் குமார் ஆகியோர் இணையச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து