முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரிகுடா பிராந்தியத்துக்கான வானொலி ஒலிபரப்பு சேவையை தொடங்கியது சீனா

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவின் குவாங்டொங், ஹாங்காங் மற்றும் மக்கௌபெரும் விரிகுடா பிராந்தியத்துக்கான வானொலி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ரேடியோ தி கிரேட்டர் பே ஏரியா என்று அழைக்கப்படும் இந்த வானொலி ஒலிபரப்பு சேவை, சீன ஊடகக்குழுமத்தின் கீழே இயங்கி வருகிறது. குவாங்டொங், ஹாங்காங் மற்றும் மக்கௌபெரும் விரிகுடா பிராந்தியத்துக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள முதலாவது தேசிய வானொலி நிலையம் இதுவாகும். தினமும் 21 மணிநேரம், எப்.எம் 101.2 மெகா ஹெட்ஸ் மற்றும் மத்திய அலைவரிசை 1215 கிலோஹர்ட்ஸ் மூலமாக, குவாங்டொங் மாநிலத்தின் 9 நகரங்களுக்கும் ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களுக்கும் இந்த வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.

இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் தலைவர், ஷென் ஹாய்சியுங் துவக்க விழாவில் பேசுகையில், இந்தப் புதிய வானொலி சேவை, சீன பெருநிலப் பகுதிக்கும் ஹாங்காங் மற்றும் மக்கௌ ஆகியவற்றுக்கும் இடையேயான ஒத்துழைப்பை ஆழப்படுத்த உதவும் என்று தெரிவித்தார். அதே நாள், இந்த வானொலி நிலையத்தின் புதிய ஊடகமும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து