முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பிரிட்டனின் ஜிப்ரால்டர் மாகாண அரசால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஈரானின் ஏட்ரியன் தர்யா 1 எண்ணெய்க் கப்பல் மீது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தக் கப்பலுக்கு உதவி செய்பவர்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கப்பலின் இந்திய கேப்டன் அகிலேஷ் குமார் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டர் ஜலசந்தியில் பிரிட்டன் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி சிறைப்பிடித்தது. எனினும், அந்தக் கப்பல் இரு வாரங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது. தற்போது அந்தக் கப்பல், ஏட்ரியன் தர்யா 1 எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் ஏட்ரியன் தர்யா 1 எண்ணெய்க் கப்பல் சிரியா நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரானின் ஏட்ரியன் தர்யா 1 எண்ணெய்க் கப்பல், சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது தொடர்பாக எங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து