முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய பாகிஸ்தான் கட்சித் தலைவர்

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : பாகிஸ்தானில் இயங்கி வரும் முத்தஹிதா கவ்மி கட்சியின் தலைவர் அல்தாப் ஹுசைன் லண்டனின் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சாரே ஜஹான் சே அச்சா பாடலைப் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும், லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் அரசியல் கட்சியான முத்தஹிதா கவ்மி கட்சியின் தலைவர் அல்தாப் ஹுசைன் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் இந்திய நாட்டைப் புகழ்ந்து எழுதப்பட்ட சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற பிரபல உருது மொழிப் பாடலை பாடினார். இது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், அரசியலமைப்பு 370-ம் பிரிவு நீக்கப்பட்டது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்த முடிவை இந்திய அரசாங்கம் இந்திய மக்களின் முழு ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது. ஜம்மு காஷ்மீரை மீது படையெடுக்க காஷ்மீர் பழங்குடியின மக்களை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மகாராஜா இந்தியாவின் உதவியை நாடியதால ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. இதுவரை காஷ்மீர் நிலத்துக்காக பாகிஸ்தான் இந்தியாவோடு நான்கு முறை சண்டையிட்டது. நான்கு முறையும் படுதோல்வி அடைந்தது. ஆயினும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டத்தை நிறுத்தவில்லை. ஜிஹாதிகள் மூலம் இந்திய எல்லைக்குள் தொடர்ந்து ஊடுருவி வருகிறது என்று கூறினார். பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து