முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம்: மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதியன்று ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, மது அருந்தி வானம் ஓட்டுபவருக்கு ரூ.10,000-மும், வேகமாக வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் உரிய ஆவணங்களின்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 5000 முதல் ரூ.10,000 வரை அபராதம் மற்றும் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சீட்பெல்ட், ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் ரூ. 100 லிருந்து ரூ.1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் செலுத்துவதுடன் 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த புதிய சட்டத்தின்படி, மாநிலத்தின் எந்த பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதே போன்று, ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆவதற்கு ஓராண்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து