முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் முன்னாள் முதல்வர் லல்லு உடல்நிலை மோசம்

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் தெரிவித்துள்ளார்.

மாட்டு தீவனம் தொடர்பான 4 வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று லல்லு பிரசாத் யாதவ் சிறையில் இருந்து வந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட லல்லு, கடந்த ஓராண்டாக ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரது  உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பி.கே.ஜா கூறுகையில்,

லல்லுவின் சிறுநீரகம் 37 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. 63 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. லல்லுவிற்கு சிறிதாக இருந்த கட்டி வளர்ந்து வந்ததால் ஆப்பரேஷன் செய்து அகற்றினோம். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது தான் ரத்தத்தில் நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரது சிறுநீரக இயக்கம் 50 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக குறைந்துள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளும் அவரது சிறுநீரக செயல்பாட்டை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து