முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் தாவரவியல் பூங்காவினை முதல்வர் எடப்பாடி பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற கே.இ.டபிள்யூ. தாவரவியல் பூங்காவினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.  

லண்டனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற கே.இ.டபிள்யூ. தாவரவியல் பூங்காவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பல்வேறு நாடுகளின் அந்தந்த பருவ காலங்களில் வளரும் பூச்செடிகள், காய்கறி செடிகள், மற்றும் பல வகையான தாவரங்கள்  இங்கிலாந்து நாட்டில் உள்ள  கே.இ.டபிள்யூ.  தாவரவியல் பூங்காவில் அந்தந்த தாவரங்களுக்கு ஏற்ற சீதோஷ்ன நிலையை செயற்கையாக  ஏற்படுத்தி உலகமே வியக்கும் வண்னம் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அமேசான் சீதோஷ்ண நிலையில் வளரும் தாவரங்கள், பாலைவனத்தில் வளரும் தாவரங்கள், குளிர் பகுதியில் வளரும் தாவரங்களின் வளர்ப்பு மற்றம் பராமரிப்பு  முறை குறித்தும், அதை வேளாண் ஆராய்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும்  முதல்வர் பார்வையிட்டு கேட்டறிந்தார்.  

இந்த நிகழ்வின்  போது, அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள் முனைவர். எஸ். விஜயகுமார், டாக்டர் பி. செந்தில்குமார், மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து